×

இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளை ஆன்மீக பெருமக்களாகிய நாங்கள் அனைவரும் வாழ்த்தி பாராட்டுகிறோம்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேரூர் சாந்தலிங்க சுவாமிகள்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளை ஆன்மீக பெருமக்களாகிய நாங்கள் அனைவரும் வாழ்த்தி  பாராட்டுகிறோம் என  குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் தகவல் தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை அருள்மிகு மரகதாம்மாள் சமேத மல்லிகேஸ்வரர் திருக்கோயில்  மற்றும் அருள்மிகு சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானம் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, குன்றக்குடி  பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் ஆகியோர் பால்குடத்தை துவங்கி வைத்து, புதிய வெள்ளி திருத்தேர் பணியைத் தொடங்கி வைத்தார்கள். தவத்திரு குன்றக்குடி  பொன்னம்பல அடிகளார் பேசும் போது கூறியதாவது காளிகாம்பாள் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் பால்குடபெருவிழா கோலாகலமாக பக்தி உணர்வுடன் இன்று நடைபெற்று இருக்கிறது, அதுமட்டுமல்லாமல் சுமார்  2.5 கோடி மதிப்பீட்டில் வெள்ளி தேர் செய்வதகான பணிகளும் இன்று தொடங்கப்பட்டுள்ளது, மாண்புமிகு முதல்வர் அவர்கள், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அறநிலையத்துறையின் செயல்திட்டங்கள் அனைத்தையும் உடனுக்குடன் விரைவாக நிறைவேற்றுகிறார்கள், தமிழகம் முழுவதும் ஏராளமான திருக்கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது, கொராணாவின் அச்சத்திலிருந்து விடுபட்டு தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் திருவிழாக்கள் ஆலையப் பெருவிழாக்கள் ஆன்மீக நிகழ்ச்சிகள் ஆலயத்திருப்பணிகள் திருக்கோயில் நிலங்களை மீட்கின்ற பணிகள் மேம்படுத்தப்பட்ட பணிகள், வருவாயை பெருக்கின்ற பணிகள், பக்தர்களுக்கான எல்லா விதமான அடிப்படை வசதிகள் அனைத்துமே இப்போது மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படி  சிறப்பாக நடைபெற்றுகொண்டிருக்கிறது, இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக ஆன்மீக பணிகளை ஆற்றிவருகிறது ஆன்மீக பெருமக்களாகிய நாங்கள் அனைவரும் வாழ்த்தி வரவேற்றி பாராட்டுகிறோம். திருக்கோயில்களில் மொட்டைக்கு கட்டணமில்லை திட்டமும், நாள் முழுதும் அன்னதான திட்டமும் பக்தர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் பேசும் போது கூறியதாவது  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அருள்மிகு மரகதாம்மாள் சமேத மல்லிகேஸ்வரர் திருக்கோயில் பால்குடம் துடங்கி இங்கே அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானம் திருக்கோயிலில் அம்மனுக்கு பால் அபிசேகம் நடைபெற்றது அதே போல இந்த திருக்கோயிலின் அறங்காவலர்கள் முயற்சியினாலோ அறநிலையத்துறையின் வழிகாட்டுதலின்படியும் இங்கே சுமார் 2.5 கோடி மதிப்பீட்டில் வெள்ளி தேர் செய்வதகான பணிகளும் இன்று தொடங்கப்பட்டுள்ளது,  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற நாள் முதல் அவருக்கு ஆன்மீக தளபதியாக  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்கள் திகழ்ந்துவருகிறார்கள், அவர் பொருபேற்ற நாள்முதல் எங்கெள்ளால் ஆக்கிரமிப்பு  செய்யப்பட்ட திருக்கோயில் நிலங்களை மீட்டு எடுக்கும்  முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் அவருக்கு எனது பாரைட்டை தெரிவித்து கொள்கிறேன். திருக்கோயிலில் குடமுழுக்கு விழா நடத்துவதற்கும் வடபழநி கோயிலில் குடமுழுக்கு விழாக்கள் சிறப்பாக நடத்தினார்கள், மகா சிவராத்திரி அன்று நாள் முழுவதும் பல்வேறு விதமான  ஆன்மீக நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து உள்ளது பாராட்டிற்கு உரியது, திருக்கோயிலில் வருவாய் முறையாக செலவு செய்யப்படவேண்டும், ஒரு சில கோயில்களில் மதியம் மட்டும் அன்னதானம் நடைபெற்று வந்தது தற்போது திருக்கோயிலில் வருவாய் கொண்டு 5 மேற்பட்ட திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் நடைபெற்று வருவது பாராட்டிற்கு உரியது, தொடர்ந்து நல்ல பணியை இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது, புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழு கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளார்கள் கோயில்களில் இருக்கக்கூடிய ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் படியெடுத்து ஒலி வருடல் செய்து பாதுகாக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது இதற்கு ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. தல புராணம், தல வரலாறு ஆவணப்படுத்துதல்  புத்தகங்களாக வெளியிடுதல் போன்ற பணிகளுக்கு ஆலோசனை வழங்கக்கூடியவராக தவத்திரு குன்றக்குடி  பொண்ணம்பல அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் முன்னால் முதல்வர் கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம், இத்திட்டம் சிறப்பாக தற்பொழுது நடைமுறைபடுத்தப்பட்டு  அனைத்து ஆன்மீக பெருமக்களின் பாராட்டை பெற்றது. அர்ச்சகர் பயிற்சி வகுப்பு நூல்களை ஸ்ரீ காளிகாம்பாள் கோயில்களின் சிவாச்சாரியார்கள் செய்து உள்ளார்கள், புதிதாக தொடங்கப்பட்டுள்ள கல்லூரிகள் மூலமாக ஆன்மீக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது பாராட்டிற்குரியது,  நீண்ட காலமாக ஆகமங்கள் மொழிபெயற்கப்படாமல் உள்ளது, அதனை மொழிபெயற்க்கவும் சுகிசிவம், சக்திவேல் முருகனார் நியமிக்கப்பட்டுள்ளார்கள். திருக்கோயில்களின் ஆகம விதிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் மொழிபெயற்கப்பட உள்ளது பாராட்டிற்குரியது, இலங்கை போன்ற நாடுகளில்  அறநெறி பாடசாலைகள் திருக்கோயில்களில் நடைபெருகின்றது, கோயிலுக்கு வரக்கூடிய குழந்தைகளுக்கு சமயம், திருக்கோயில் வரலாறுகளை இலங்கை மக்கள் செய்து வருகிறார்கள், அறநெறி பாடசாலை துடங்க முயற்சி எடுத்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி, இந்து சமய அறநிலையத்துறையின் அனைத்து செயல்பாடுகளும் கனிணிமய மாக்கப்பட்டு வருகிறது, நீண்ட காலமாக அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது தற்போது அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு வருவது பாராட்டிற்குரியது என குறிப்பிட்டார்….

The post இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளை ஆன்மீக பெருமக்களாகிய நாங்கள் அனைவரும் வாழ்த்தி பாராட்டுகிறோம்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் appeared first on Dinakaran.

Tags : Hindu Religious Foundation ,Kunkudi Ponnambala Adeas Perur Shantalinga Swaramis ,Chennai ,Kunkukudi Bonnambala Foots Perur ,Shantalinga Swaramis ,
× RELATED உச்சநீதிமன்ற நீதிபதி முன்னிலையில்...